Sunday, 24 March 2013

எனக்குள்ளே ஒரு காதல் ..


என் இதழோரம்
மந்தகாசமாய் ஒரு புன்னகை,
மனதின் மகிழ்ச்சி 
அகமெல்லாம் மலர்ச்சியாய்,
சுற்றாத என் கடிகாரம் 
வாயு வேகத்தில் ஓடத் துவங்கியது,
ஓடாத என் நாள்காட்டி
இன்று மனோ வேகத்தில்,

குழப்ப ரேகைகள் மாறி 
இன்று 
சந்தோஷத்தின் ரேகைகள்,
இலையுதிர் காலம் மாறி 
இன்று 
என் வாழ்வில் வசந்த காலம்,

புயலும், சூறாவளியுமாய்,
அலையோடு அலையாய்,
அலைபாய்ந்து கொண்டிருந்த கடல்,
பளிங்கு போல் தெளிந்த,
சலனமின்றி
இலக்கு நோக்கி ஓடும்                          
வற்றாத நதி போல்,
என் மனம் ...

முதல் முறையாய் 
இயற்கையை ரசிக்கத் துவங்கினேன்,
தென்றல் வீசும் மாலை வேளை,
சிறு சிறு துளியாய்                
சாரல் மழை,
அதுவும் நானிருப்பது கடற்கரையில்...
சொல்லவும் வேண்டுமா ?
நிலவு தன் வேலை செய்ய
சூரியன் விடை கொடுக்கும் 
மந்தகாச வேளை,
உன் நினைவுகளைச்         
சுமந்துக் கொண்டு நானும்,

தூரத்தில் தெரிகிறது                  
வானவில்,
என் மகிழ்ச்சிக்காக
        இயற்கையின் பதில் புன்னகை..

மழைச்சாரல் பூமியை முத்தமிட 
ஆனந்தமாய் எழுகிறது                          
சுகந்த வாசம்,
ஆகா
பூமிமகளும் சந்தோஷிகிறாள்...

தென்றலும் 
என் காதில் சொல்கிறது 
                     உன் பெயரை 
மிகவும்            
இரகசியமாய் ..

மணலில் உன் பெயரை                  
                    நானெழுத
அழிக்க வந்த அலை கூட,
நாணிக்கோணி             
திரும்பிச் செல்கிறது ..

நானும் கூட கவிதை எழுத துவங்கினேன்,

நினைக்கையில்
மறுபடியும் வெட்கமாய்
                      ஒரு குறுநகை..

ம்ம்ம்ம்ம்,

எனக்குள்ளே ஒரு காதல் ..

© Copyright 2013 Bessimon Thankaraj

All rights including all copyrights and all other intellectual property rights in the contents are reserved by the author. The contents or lines herein are not to be copied, reproduced, printed, published, posted, displayed, incorporated, stored in or scanned into a retrieval system or database, transmitted, broadcast, bartered or sold, in whole or in part without the prior express written permission of the sole author, who is, unless otherwise denoted, Bessimon Thankaraj. Unauthorised duplication and modification are  strictly prohibited: these constitute an infringement of National and International Copyright laws.

No comments:

Post a Comment