அணிவித்த மோதிரமும்
கட்டியத் தாலியும்
புணர்ந்தப் படுக்கையும்
கணநேரக் கனவுகளாய்,
கலையும் மேகங்களாய்,
காணாமலேயேப் போகின்றன.
காதல்கள் தொலைவதற்கே.
© Copyright 2016 Bessimon Thankaraj
சில தேடல்கள் மட்டும் முடிவே இல்லாதவை. அது போல தான் என் தேடலும் . தமிழின் மீதான தீராத ஆர்வம் தான் என் குழந்தையின் கரு, மாளாத காதல் தான் என் கருவிற்கு உயிரணு. கருவும் உருவும் சேர்ந்து நானும் பிரசவிக்கிறேன் குழந்தைகளை, கவிதையின் வடிவமாய். படைப்புகளின் அரங்கேற்றமாய், பதிவேற்றமாய் இங்கே பதிவு செய்கிறேன் உங்களுக்காக. படியுங்கள், கருத்துகளை பதியுங்கள், பகிருங்கள்.. உங்கள் கருத்துகளை தெரிந்துகொள்ளும் ஆவலுடன், பெஷிமோன் தங்கராஜ்