Saturday, 16 April 2016

என் கிறுக்கல்கள்

குறைப் பிரசவத்தில்
குழந்தையை தவறவிட்டத்
தாய் போல்,
பாலைவனத்தில் நிழல்
தேடி அலையும்
பட்டாம்பூச்சி போல்,
தொலைந்தது எதுவென்று
                           தெரியாமல்
தொலைத்ததைத்
                   தேடிக் கொண்டிருந்தேன்,
தேடுவது கிடைக்காதென்று
                   தெரிந்தும் .....

As a mother whose child is still born of premature labor,
As aimless butterfly looking for shade in forsaken deserts,
Without a pint of clue- am searching on, though I  wouldn't find it or know it again....

Translation : Senthil Kumar Balachander

Tuesday, 26 January 2016

என் கிறுக்கல்கள்

அணிவித்த மோதிரமும்
கட்டியத் தாலியும்
புணர்ந்தப் படுக்கையும்
கணநேரக் கனவுகளாய்,
கலையும் மேகங்களாய்,
காணாமலேயேப் போகின்றன.
காதல்கள் தொலைவதற்கே.

© Copyright 2016 Bessimon Thankaraj

Monday, 25 January 2016

நான் Rohith Vemula

உன்னைச் சுமந்த 
உன் தாயின் கர்ப்பப்பையில் புற்று இருந்திருக்கலாம்
உனக்குப் பால் தந்த 
அவளின் முலைக்காம்புகளில் விஷம் இருந்திருக்கலாம்
உன்னைப் பெற்றவுடன்
உன் வாயில் கள்ளிப்பாலேனும் ஊற்றியிருக்கலாம்
இல்லை உனக்கு உயிர் தந்த 
உன் தந்தையேனும் மலடாய் இருந்திருக்கலாம்
நேரம் கடந்து விட்டது
பரவாயில்லை.
ஆயினும்
மற்றுமொரு முறை பிறந்து வருவேன்
உன் விதைப்பையை அறுத்து
ஆண்மை நீக்கம் செய்து
நீ வளர்த்த சாதித் தீயில்
அமிலமூற்றி உன்னை எரிக்க!!!
சாதி வெறிப்பிடித்த 
மலட்டு விதைகள் உன்னோடாவது அழிந்துப் போகட்டும்.
- நான் Rohith Vemula

Translation 

The womb that carried you could've been cancerous . 
The bosom that fed you with milk could've been poisonous 
The moment you were out , she could've killed you by feeding you with some spurgemilk . 
Or the father who gave you this life could've been impotent 
Now that the time has passed , no problem . 
But I shall be born again 
Tearing your scrotum 
Cutting off your masculinity from you 
The caste fire that burnt you 
Will be brunt by adding more inflammable  
Casteist craze seeds could probably get destroyed with you . 

-Me Rohith Vemula

Translated by : Sri Krishna Ananthan

© Copyright 2016 Bessimon Thankaraj

Thursday, 26 February 2015

என் கிறுக்கல்கள் 5

என் இரவுகள்
விடியாமலே போய்விட வேண்டும்
மரித்துப் போன
என் ஆன்மாவின்
மரண சடங்கிற்கு
அதுவேனும் சாட்சியாய்
இருந்து விட்டுப் போகட்டும். .
© Copyright 2015 @Bessimon Thankaraj

Monday, 13 October 2014

என் கிறுக்கல்கள் 4

சிணுங்கல்
கொஞ்சல்
கெஞ்சல்
சிரிப்பு 
புன்னகை 
இசை 
தூறல்
மழை 

மழையே நான் உன்னை காதல் செய்கிறேன் 

© Copyright 2014 Bessimon Thankaraj   

Thursday, 3 July 2014

வலி

வலிக்கிறது
மனமும் இதயமும்
ஏனென்று புரியவில்லை
எதற்கென்று புரியவுமில்லை
ஆயினும் வலிக்கிறது
கனிந்த கரு உதிரமானது போல
உயிர்க்கூடு
உணர்வுடன் அறுந்தது போல்
ஓவென்று அழ
நீ என் சொந்தமுமில்லை
ஒப்பாரி வைக்க
நீ என் பந்தமுமில்லை
ஆயினும்
அழுகின்றேன்
கண்ணீர் விட்டு புலம்புகிறேன்
ஒரே ஒரு யாசகம் தான்
உன்னைக் காண வேணும்
ஒரு முறையேனும்,
உன் காதில் சொல்ல வேணும்
நான் உன்னை காதல்
செய்கிறேனென்று. . .

Dedicatd to You . .



© Copyright 2014 Bessimon Thankaraj

Wednesday, 25 June 2014

நானும் என் காதலும் ...

உன்னை முதன் முதலாய் 
சந்தித்த அந்த ஒரு நொடி 
இன்னும் பசுமையாய் என் நெஞ்சில் ...

அந்த ஒரு நொடியில் 
உன் கண்ணில் தோன்றிய ஒரு மின்னல் 
உன் இதழோரம் குவிந்த ஒரு குறுநகை 
தேனில் தோய்த்த குயிலோசை போல 
என் காதில் விழுந்த உன் குரல்
இவையெல்லாம் தான் என்னை உன்
காலடியில் விழ வைத்தது ....

உன்னை கவர்வதற்காய்
நான் செய்த லீலைகளும்,
இல்லாத பொய்களைச் சொல்லி
உன்னை சுற்றிச் சுற்றி தேடி வந்ததும்,
நீ போகும் வழி நோக்க
அந்த விடிகாலையில்
வாசலருகே காத்திருந்ததும்,
பிரிகையில் நீ கொடுத்த
அணைப்புக்கும், முத்தத்திற்கும்
இணையே இல்லை ...

உன் குறுஞ்செய்திக்காய்
காத்திருந்த தருணங்களும்
உன்னுடன் பேசுவதற்காய்
உறங்காமல் கழித்த இரவுகளும்
உன்னை சந்திபதற்க்காய்
ஏங்கிய நாட்களும்
அம்மம்மா எத்தனை கதைகள் ...

முதன் முறையாய்
என் வீட்டிற்கு வந்த போது
நீ போட்ட என் சட்டையை
இதுவரை துவைக்கவில்லை
ஏன் தெரியுமா ?
உன் வியர்வை வாசம்
போய்விடும்....

கடற்கரையில்
எதிர்பாராது உன்னைக் கண்டதும்
என் தோளில் நீ சாய்ந்ததும்
சட்டென யாரும் காணாவண்ணம்
நீ கொடுத்த அந்த முத்தமும்
விடை பெறுகையில்
ரயிலில் வைத்து
நீ கட்டி அணைத்ததும்
இன்னும் பசுமையாய் என் நெஞ்சில் ..

என் சொல்லாய்
என் உயிராய்
என் இதயமாய்
இதயத் துடிப்பாய்
என் எல்லாமுமாய்
மாறி விட்டாய் ..

ஒரு கணம் கூட
என்னை பிரிய நினைக்காதே
அக்கணமே
என் உயிர் பிரிந்து விடும் ....

© Copyright 2014 Bessimon Thankaraj