Wednesday, 25 June 2014

நானும் என் காதலும் ...

உன்னை முதன் முதலாய் 
சந்தித்த அந்த ஒரு நொடி 
இன்னும் பசுமையாய் என் நெஞ்சில் ...

அந்த ஒரு நொடியில் 
உன் கண்ணில் தோன்றிய ஒரு மின்னல் 
உன் இதழோரம் குவிந்த ஒரு குறுநகை 
தேனில் தோய்த்த குயிலோசை போல 
என் காதில் விழுந்த உன் குரல்
இவையெல்லாம் தான் என்னை உன்
காலடியில் விழ வைத்தது ....

உன்னை கவர்வதற்காய்
நான் செய்த லீலைகளும்,
இல்லாத பொய்களைச் சொல்லி
உன்னை சுற்றிச் சுற்றி தேடி வந்ததும்,
நீ போகும் வழி நோக்க
அந்த விடிகாலையில்
வாசலருகே காத்திருந்ததும்,
பிரிகையில் நீ கொடுத்த
அணைப்புக்கும், முத்தத்திற்கும்
இணையே இல்லை ...

உன் குறுஞ்செய்திக்காய்
காத்திருந்த தருணங்களும்
உன்னுடன் பேசுவதற்காய்
உறங்காமல் கழித்த இரவுகளும்
உன்னை சந்திபதற்க்காய்
ஏங்கிய நாட்களும்
அம்மம்மா எத்தனை கதைகள் ...

முதன் முறையாய்
என் வீட்டிற்கு வந்த போது
நீ போட்ட என் சட்டையை
இதுவரை துவைக்கவில்லை
ஏன் தெரியுமா ?
உன் வியர்வை வாசம்
போய்விடும்....

கடற்கரையில்
எதிர்பாராது உன்னைக் கண்டதும்
என் தோளில் நீ சாய்ந்ததும்
சட்டென யாரும் காணாவண்ணம்
நீ கொடுத்த அந்த முத்தமும்
விடை பெறுகையில்
ரயிலில் வைத்து
நீ கட்டி அணைத்ததும்
இன்னும் பசுமையாய் என் நெஞ்சில் ..

என் சொல்லாய்
என் உயிராய்
என் இதயமாய்
இதயத் துடிப்பாய்
என் எல்லாமுமாய்
மாறி விட்டாய் ..

ஒரு கணம் கூட
என்னை பிரிய நினைக்காதே
அக்கணமே
என் உயிர் பிரிந்து விடும் ....

© Copyright 2014 Bessimon Thankaraj

No comments:

Post a Comment