கவிதை எழுதலாமென்று
காகிதம் எடுத்தேன்,
எழுதவும் துவங்கினேன்.
எழுதுகையில் ஒரு பட்டிமன்றம்
கவிதை எழுதவா ?
இல்லை
உன் பெயரை எழுதவா என்று ..
வெகு நேரம் இயலவில்லை ...
கவிதைக்கு ஒரு நடை,
ஒரு எதுகை,
ஒரு மோனை,
பார்த்தால்,
உன் நடையும்,
உன் சந்தமும்,
முன்னணியில்...
கவிதைக்கு ஒரு மொழி,
கொஞ்சும் குழந்தை போல்,
கீச்சிடும் கிளியை போல்,
கூவும் குயில் போல்,
உன் மொழியோ
இவை அனைத்தும் கலந்த கலவை ...
கவிதைக்கு ஒரு ஆண்மை,
ஒரு திண்மை,
ஒரு கர்வம்,
அது உன் நடையில்,
உன் பேச்சில் ..
கவிதை என்றால் ஒரு இனிமை,
அது உன் சிரிப்பில்,
உன் குரலில் ...
கவிதைக்கு ஒரு உயிர் ..
அது எங்கே என்று
தேடுகையில் தான் தெரிந்தது
என் உயிரைக் காணவில்லை என்று ...
காணமல் போன என் உயிரை
தேடினேன் ..
எண் திசைகளிலும்
ஏழு உலகங்களிலும்
நீ இருக்கு இடம் தேடி
அலைபாய்ந்துக் கொண்டிருந்தது ..
கவிதை எழுத வந்த நான்
எழுதாமலேயே
காகிதத்தை மூடினேன் ...
© Copyright 2013 Bessimon Thankaraj
காகிதம் எடுத்தேன்,
எழுதவும் துவங்கினேன்.
எழுதுகையில் ஒரு பட்டிமன்றம்
கவிதை எழுதவா ?
இல்லை
உன் பெயரை எழுதவா என்று ..
வெகு நேரம் இயலவில்லை ...
கவிதைக்கு ஒரு நடை,
ஒரு எதுகை,
ஒரு மோனை,
பார்த்தால்,
உன் நடையும்,
உன் சந்தமும்,
முன்னணியில்...
கவிதைக்கு ஒரு மொழி,
கொஞ்சும் குழந்தை போல்,
கீச்சிடும் கிளியை போல்,
கூவும் குயில் போல்,
உன் மொழியோ
இவை அனைத்தும் கலந்த கலவை ...
கவிதைக்கு ஒரு ஆண்மை,
ஒரு திண்மை,
ஒரு கர்வம்,
அது உன் நடையில்,
உன் பேச்சில் ..
கவிதை என்றால் ஒரு இனிமை,
அது உன் சிரிப்பில்,
உன் குரலில் ...
கவிதைக்கு ஒரு உயிர் ..
அது எங்கே என்று
தேடுகையில் தான் தெரிந்தது
என் உயிரைக் காணவில்லை என்று ...
காணமல் போன என் உயிரை
தேடினேன் ..
எண் திசைகளிலும்
ஏழு உலகங்களிலும்
நீ இருக்கு இடம் தேடி
அலைபாய்ந்துக் கொண்டிருந்தது ..
கவிதை எழுத வந்த நான்
எழுதாமலேயே
காகிதத்தை மூடினேன் ...
© Copyright 2013 Bessimon Thankaraj